உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாதுர் மாஸ்ய விரதம்; சிருங்கேரி சுவாமிக்கு பக்தர்கள் குரு தட்சணை

சாதுர் மாஸ்ய விரதம்; சிருங்கேரி சுவாமிக்கு பக்தர்கள் குரு தட்சணை

வத்திராயிருப்பு: சிருங்கேரி பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதி சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் சாதுர் மாஸ்ய விரதத்தின் போது வத்திராயிருப்பு பக்தர்கள் சார்பில் குரு தட்சணை எனும் பிக்ஷா வந்தனம் வழங்குவது வழக்கம். அதன்படி கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தில் விரதம் இருக்கும் சுவாமிகளிடம் வத்திராயிருப்பு ஹரிஹரசுப்ரமணியன், பேராசிரியர் பரமேஸ்வரன் பாலாஜி, கிருஷ்ணன் சத்தியநாராயணன், டாக்டர் ஜானகி ராமன், ராமசுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் ரம்யா, பக்தர்கள் சென்று குரு தட்சணை வழங்கினர். அனைவருக்கும் சுவாமிகள் பிரசாதம், ஆசிர்வாதம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !