உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சிறுபாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா விமரிசை

அச்சிறுபாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா விமரிசை

அச்சிறுபாக்கம்: அக்னி வசந்த மஹாபாரத திருவிழாவையொட்டி, காட்டுக்கரணை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் படுகளம் நிகழ்வு நேற்று முன்தினம், விமரிசையாக நடந்தது.


அச்சிறுபாக்கம் அடுத்த காட்டுக்கரணை கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத திருவிழா கடந்த மாதம், 17ல் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 26 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் திருவிழா என்பதால், 18 நாட்கள் மஹாபாரத சொற்பொழிவும், கீழ் சிவிரி கிராமத்தைச் சேர்ந்த பாரதமாதா நாடக மன்றத்தினரால், இரவில் மஹாபாரத தெருக்கூத்து நாடகமும் நடந்து வந்தது. திரு விழாவின் நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, நேற்று மு ன்தினம் கா லை விமரிசையாக நடந்தது. இதில், கோவில் அருகே, 30 அடி நீள துரியோதனன் உருவ பொம்மையை மண்ணால் செய்து, அதில் பீமனும், துரியோதனனும் சண்டையிட்டு, இறுதியில் பீமன் தன் கதாயுதத்தால், துரியோதனின் தொடையில் அடித்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காட்டுக்கரணையை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். நேற்று காலை, தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !