உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று இரவு நடந்த பெரிய சப்பர பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழ்திசை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும் ஆரோக்கியமாதா தேவாலயத்தில், ஆண்டுத் திருவிழா கடந்த 29 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்றிரவு தஞ்சை பிஷப் சகாயராஜ் தலைமையில், 25 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியும், தொடர்ந்து பெண்கள் மட்டுமே சுமந்து செல்லும் பெரிய சப்பர பவனியும் நடந்தது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சப்பர பவனி செல்லும் வழியெங்கும், சப்பரங்களின் மீது மலர் தூவி பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடனை செலுத்தினர். பெரிய சப்பர பவனியை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று (8 ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !