திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பிரசாத விற்பனையகம் திறப்பு
திருவொற்றியூர்: இரண்டு ஆண்டுகளுக்கு பின், தியாகராஜ சுவாமி கோவிலில், பிரசாத விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில், தனியார் பராமரிப்பில், பிரசாத விற்பனை நிலையம் செயல்பட்டது. இந்நிலையில், 2024 பிப்ரவரியில், விற்பனை செய்யப்பட்ட புளியோதரை கெட்டு போனதாக, புகார் எழுந்தது. அதை தொடர்ந்து, தனி நபருக்கு பிரசாத விற்பனை அனுமதியை ரத்து செய்த கோவில் நிர்வாகம், விற்பனை நிலையத்தை மூடியது. இரண்டு ஆண்டுகளாக, பிரசாத விற்பனை நிலையம் செயல்படவில்லை. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அறிவுறுத்தல்படி, கோவில் வளாகத்தில், பிரசாத விற்பனை நிலையம், நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவில் இணை ஆணையர் முல்லை, உதவி கமிஷனர் நற்சோணை உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி, பிரசாத விற்பனை மையத்தை திறந்து வைத்தனர். அதன்படி, கோவில் நிர் வாகம் சார்பில், மடப் பள்ளி யில் தரமான பிரசாதம் தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப் படுகிறது. அதன்படி, 150 கிராம் பொங்கல் மற்றும் புளியோ தரை, 50 கிராம் எடையுள்ள லட்டு, அதிரசம், மிளகு வடை ஆகியவை, 20 ரூபாய்க்கு விற்கப் படுகின்றன.