இன்று ருண விமோசன பிரதோஷம்; சிவ தரிசனம் செய்ய வாட்டும் கடன் நீங்கி வளம் பெருகும்!
செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
பிரதோஷம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த ஒரு காலமாகும். திங்கட் கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷம் எனப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சகல பாவங்களையும் போக்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், கடன் தொல்லைகள், மற்றும் நீண்டகால கஷ்டங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. பிரதோஷ காலத்தில், சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பும், மறைந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பும் உள்ள மாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது. கோவிலில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசிப்பது சிறந்தது. நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொன்னால் அவை சிவபெருமானை உடனடியாக சேரும் என்பது நம்பிக்கை. இன்று சிவ தரிசனம் செய்வோம்.. ஈசன் அருளால் நீண்ட ஆயுள், மற்றும் உடல் நலம் பெறுவோம்!