உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாழவேடு கிராமத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம் விமரிசை

தாழவேடு கிராமத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம் விமரிசை

திருத்தணி: தாழவேடு கிராமத்தில் நடந்த கிருஷ்ணர் திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தில், ராதா – ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கிருஷ்ணர் ஜெயந்தி விழா, கடந்த 4ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, கிருஷ்ணர் ஜெயந்தி அபிஷேகம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு உற்சவர் திருவீதியுலா நடந்தது. மதியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. பின், இரவு 7:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, மூலவருக்கு அபிஷேகம் மற்றும் மாலை 6:30 மணிக்கு, கிருஷ்ணர் – ராதா, ருக்மணி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உற்சவர் திருவீதியுலா மற்றும் இரவு நாடகம் நடந்தது. விழாவை ஒட்டி, கோவில் வளாகம் மற்றும் தெருக்கள், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை, தாழவேடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !