உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாடே திரும்பி பார்க்கும் வகையில் பழநி கோவில் மேம்படுத்தப்படும்; அமைச்சர் ரமேஷ் உறுதி

நாடே திரும்பி பார்க்கும் வகையில் பழநி கோவில் மேம்படுத்தப்படும்; அமைச்சர் ரமேஷ் உறுதி

சென்னை:  ‘‘பழநி கோவில், மிகச்சிறப்பாக மேம்படுத்தப்படும்,’’ என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.


சட்டசபையில் பேசிய அ.தி.மு.க., – ரவி மனோகரன், “பக்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து, பல மைல் துாரம் நடந்து பழநிக்கு வருகின்றனர். ஆனால், மாசுபட்ட நகரமாக, பழநி மாறி விட்டது. புனிதமான நகரமாக பழநியை உருவாக்க வேண்டும்,” என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “பழநி கோவில் திருப்பணி, அன்னதானக் கூடங்கள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, எம்.எல்.ஏ.,வும் உடன் இருந்தார். “நாடே திரும்பி பார்க்கும் வகையில், ‘மாடர்ன்’ திருக்கோவிலாக, பழநி கோவிலை மேம்படுத்துமாறு முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். நிச்சயமாக, அனைத்து பணிகளையும் முடித்து, மிகச்சிறப்பாக பழநி கோவில் மேம்படுத்தப்படும்,” என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !