அவலுார்பேட்டையில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :1 hours ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ராஜகணபதி கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பின்னல் நாக கன்னி அம்மன் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம்,உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.6:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாத்துதலும், இரவு 8:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 6:30 மணிக்குகோ பூஜையும்,தொடர்ந்து 9:45 மணிக்குயாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி ராஜகணபதி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன், பின்னல் நாக கன்னி அம்மன் கோவில்கோபுரங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவும், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.