உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்

 கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: வில்லிவலம் கங்கைகொண்டீஸ்வரர் கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


வில்லிவலம் கங்கை கொண்டீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலை முறையாக பராமரிக்கா ததால், கோவில் கோபுரம் மற்றும் சுவரில் அரச செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வில்லிவலம் கங்கைகொண்டீஸ்வரர் கோவில் திருப்பணி மேற்கொள்வதற்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. உபயதாரர்கள் மூலம் திருப்பணி விரைவில் தொடங்கப்படும்’ என் றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !