உடுமலை பஞ்சமுகலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :22 hours ago
உடுமலை: உடுமலை ருத்தரப்ப நகர் ஸ்ரீ பஞ்சமுகலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிகள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. புற்று பூஜையுடன் இந்த வைபவம் துவங்கி, சக்தி அழைத்தல், பாலாற்று பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு மேல், ஸ்ரீ பரமசிவன் பார்வதி, காலை, 8:00 மணிக்கு மேல், ஸ்ரீ ரேணுகாதேவி ஜமதக்னி முனிவர் திருக்கல்யாணமும் நடந்தது. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.