உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை 3.35 மணிக்கு மங்கல இசையுடன் கும்பாபிஷேக சடங்குகள் துவங்கியது. தொடர்ந்து விசேஷ சந்தி, விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பத்தாம் கால வேள்வி (பரிவார யாகசாலை), த்ரவ்யாஹுதி, பரிவார யாகசாலை மஹா பூர்ணாஹுதி நடைபெற்று

பரிவார கலசங்கள் புறப்பாடாகியது. தொடர்ந்து பரிவார மூர்த்திகளான பிற தெய்வ சன்னிதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !