உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.30,000 மதிப்பு நோட்டுகளால் செல்வ விநாயகர் அலங்கரிப்பு

ரூ.30,000 மதிப்பு நோட்டுகளால் செல்வ விநாயகர் அலங்கரிப்பு

கடலுார்: மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவிலில், சுவாமி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலுார் மஞ்சக்குப்பத்தில் செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, 500 ரூபாய், 200, 100, 50 என, ரூபாய் நோட்டுகளால் மூலவர் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 30,000 ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் விநாயகருக்கு பயன்படுத்தப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !