மொரட்டாண்டி நவகிரக சாந்தி விநாயகருக்கு 1008 விலாம் பழத்தில் ஹோமம்
ADDED :2 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி நவகிரக சாந்தி விநாயகருக்கு 1008 விலாம் பழத்தில் ஹொமங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டியில் சனிஈஸ்வரன் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவிலில், உள்ள 54 அடி உயரம் உள்ள கிரக சாந்தி விநயாகருக்கு நேற்று காலை 1008 விலாம் பழத்தில் ஹோமங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நவகிரக சாந்தி விநாயகருக்கு கணபதி ஹோமம், அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. அதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் கீதா ராம குருக்கள் செய்திருந்தார்.