ராமநாதபுரம்: விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா வழிபாடு
ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் பொது இடத்தில் விநாயகர் சிலைகள் பிரஷ்திடை செய்து வழிபாடுகள் நடந்தது.
ராமநாதபுரம் சிவன்கோயில், குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி சொர்ண விநாயகர், கூரிசாத்த அய்யனார் கோவில் தெரு செல்வ விநாயகர் கோயில், வழிவிடு முருகன்கோயில், கோட்டை விநாயகர் கோயில், சந்தை திடல் அருகேயுள்ள வல்லபை விநாயகர் கோயில், நொச்சியூருணி சொர்ணவிநாயகர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் செல்வராஜ மகா கணபதி கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், பட்டணம்காத்தான் ‘டி’ பிளாக் மங்கள விநாயகர் கோயிலில் ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
வழுதுார் அருளொளி விநாயகர் கோயில், காவனுார் சித்திவிநாயகர், அழகன்குளம் நர்த்தன விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிஷேகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுண்டல், கொழுக்கட்டை, பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.