உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவரப்பட்டில் 75 கிலோ சந்தனத்தில் விநாயகர் சிலை

கவரப்பட்டில் 75 கிலோ சந்தனத்தில் விநாயகர் சிலை

சிதம்பரம்: சிதம்பரத்தில் 60 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் 60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

சிதம்பரம் நகரப்பகுதிகளில் இளையாக்கினார் கோவில், வாகிசன் நகர், அண்ணா தெரு, உள்ளிட்ட 24 இடங்களிலும், அண்ணாமலை நகர் பகுதியில் அண்ணாமலை நகர், காளியளம்மன் கோவில் தெரு, தெக்கிருப்பு, திடல்மேடு, குமாரமங்கலம், கவரப்பட்டு, நடராஜபுரம் உள்ளிட்ட 36 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது.

இதில் சிதம்பரம் அடுத்துள்ள கவரப்பட்டு கிராமத்தில், 75 கிலோ சந்தனம் கொண்டு பெரிய விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் சந்தனம் மற்றும் மஞ்சள் கொண்டு விநாயகர் சிலை அமைத்து விழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று வைக்கப்பட்ட சிலைகளில், இந்து முன்னனி சார்பில் வைக்கப்பட்ட 3 சிலைகள் மட்டும், நேற்று மாலை பழைய கொள்ளிடம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.மற்ற விநாயகர் சிலைகள் நாளை (16ம் தேதி) கொள்ளிடம் ஆற்றில் விஜர்ச னம் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !