சரவணம்பட்டியில் விநாயகர் தேரோட்டம்
ADDED :2 days ago
சரவணம்பட்டி: சரவணம்பட்டியில் உள்ள சிரவணபுரீஸ்வரர், சிவகாமி அம்மன் உடனுறை விநாயகருக்கு 129வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா, தேர் திருவிழா நேற்று நடந்தது.
சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் மருதாசல அடிகள், வாராகி மணிகண்ட சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர் திருவிழாவில், மயிலாட்டம், ஒயிலாட்டம், குதிரை, யானை ஒட்டக ஊர்வலம், விமரிசையாக நடந்தன. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், காளப்பட்டி ரோடு, சத்தி ரோடு, பெரியார் நகர் வழியாக மீண்டும் நிலையை அடைந்தது. ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்.