உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சிலை ஊர்வலம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து கற்பக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற விநாயகர், கூ.கூ.,விநாயகர் கோயில், கைலாசநாதர் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இரவில் பக்தர்கள் கும்மி ஆட்டம், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சி, தங்கவேல் நகர் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் சார்பில் சுமார் 10 அடி உயரம் கொண்ட ராஜகணபதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கணபதி ஹோமம் நேற்று காலை நடந்தது. தொடர்ந்து மாலை விநாயகர் சிலை ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஏந்தி கும்மியடித்து ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதியின் வழியாக சென்றனர். விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !