விநாயகரை வணங்கிய ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமி
ADDED :3 days ago
ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து விநாயகர் வீதி உலா வந்தார். அப்போது கோயில் யானை ராமலட்சுமி விநாயகரை வணங்கி வரவேற்றது.
நேற்று காலையில் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி, வீதி உலா சென்றார். அப்போது கோயில் யானை ராமலட்சுமி விநாயகரை வணங்கி வரவேற்றது. வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள காட்டுபிள்ளையார் கோயிலில் எழுந்தருளியதும், தீபாராதனை நடந்தது. இதன்பின் விநாயகர் அங்கிருந்து புறப்பாடாகி திருக்கோயிலுக்கு சென்றார்.