உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை கோவில் தடுப்புச்சுவரில் விரிசல் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

மலை கோவில் தடுப்புச்சுவரில் விரிசல் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

சிங்கபெருமாள் கோவில்: ஆப்பூர் மலை கோவிலில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்புச்சுவர், சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம்,ஆப்பூர் கிராமத்தின் மலை மீது பழமையான பல்லவர்கள் கால நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆங்கில புத்தாண்டு, காணும் பொங்கல், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக திருமண தடை நீங்க வேண்டி ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர்.

இந்நிலையில், மலை மீது அமைந்துள்ள கோவிலின் முகப்பு பகுதியில் பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.

தற்போது இந்த சுவரின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும்

பக்தர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள, தடுப்புச்சுவரை சீரமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !