மேல்வளையமாதேவி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவி கிராமத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 11ம் தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்துபூஜை, கோ பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
12ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, யந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 6.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, பிரம்மசாரி பூஜை, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துார்ச்சனை, ஸபர்ஸாகுதி, திரவியாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு யாக சாலையிருந்து கடம்புறப்பாடாகி 10.15 மணியளவில் முத்துமாரியம்மன்கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் முத்துமாரியம்மன், பரிவார தெய்வங்கள் விநாயகர், பாலமுருகன், துர்கையம்மன், நாகம்மா ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் தீபாராதனை நடந்தது.