அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா
ADDED :6 days ago
அன்னூர்: அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், இன்று புரட்டாசி திருவிழா நடந்தது.
அன்னூரில் உள்ள பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதர பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் பெருமாள் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.