புரட்டாசி சனி; திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதியில் தமிழகம், புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்பாரண்யேஸ்வரரையும், சனீஸ்வர பகவானையும் வழிபட்டனர்.முன்னதாக நளன் குளத்தில் குளித்துவிட்டு பக்தர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள்ளு சமர்ப்பித்து சிறப்பு அர்ச்சனை செய்து குடும்ப நலன், தொழில் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நேக்கில் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.