திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் 44வது திகழ்கிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக திகழ்வதால் குறிப்பாக சனிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகளில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5: 30 மணி முதல் இரவு 7:30 மணி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு உற்ஸவமூர்த்திகள் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, சுண்டல், மற்றும் தயிர் சாதம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் போதிய இடைவெளியில் மின்விசிறி மற்றும் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்புகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.