உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கும். அதன்படி இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.பின் நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாணப்பெருமாள் அருள்பாலித்தார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை நித்ய கல்யாண பக்தஜனசபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.இதுப்போல் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !