திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்
ADDED :2 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர், திருமலை சீனுவாச பெருமாள் அலங்காரத்தில் நெய்தீப தரிசனத்தில் அருள்பாலிக்கிறார்.
நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு காலை விஸ்வரூப தரிசனம், கோபூஜை மற்றும் தோமாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து காலை 10:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவிக்கு திருமஞ்சனம், மதியம் உச்சிகால பூஜை நடந்தது. மாலை நடை திறக்கப்பட்டது, உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.