உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராஜகோபுர திருப்பணிக்கு சாரம் அமைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராஜகோபுர திருப்பணிக்கு சாரம் அமைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக அரசின் முத்திரை சின்னமான ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தை புனரமைத்து பஞ்சவர்ணம் பூசும் திருப்பணிக்காக சாரம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.


ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள வட பத்ரசாயி சன்னதியின் ராஜகோபுரம் தான் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கி வருகிறது. இவ்விரு கோயில்களில் 2000 பிப்ரவரி 10-ல் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு முன்பு வரை ஒரே வர்ணத்தில் இருந்த ராஜகோபுரம், அப்போது பஞ்சவர்ண நிறங்கள் பொருந்திய ராஜகோபுரமாக காட்சியளித்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் மறு கும்பாபிஷேகத்திற்காக புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, 2015 மே 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. 2027ல் 12 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ள நிலையில் அடுத்த கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, ஜனவரி மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, முதல் கட்டமாக சக்கரத்தாழ்வார் சன்னதி மண்டப பணி துவங்கியது. இந்நிலையில் ராஜகோபரத்தை புனரமைத்து பஞ்சவர்ணம் பூசும் திருப்பணியை ராம்கோ நிறுவனம் தனது செலவில் மேற்கொண்டுள்ளது. இதற்காக ராஜகோபுரத்தை சுற்றி 200 அடி உயரத்திற்கு சாரம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !