தங்ககவசம் அணிந்து வீதிஉலா வந்த மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர்
ADDED :2 days ago
திருச்சி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் தங்ககவசம் அணிந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம். நேற்று புரட்டாசி மாத சங்கடஹரசதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் கோயிலில் இரவு உற்சவர் மாணிக்கவிநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்கவிநாயகர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட, உள்பிரகாரங்களில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர்.