உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வந்து செய்கின்றனர். இந்த நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நவபாஷாணம் வந்து செல்கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. வெயில் நேரங்களில் மட்டுமே பக்தர்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. இன்று காலை முதல் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக, நடைமேடை வழியாக சுற்றி வந்து நவக்கிரகங்களை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !