உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலூர் சத்திய ஞான சபை, பெருவெளியில் அறநிலையத்துறை கமிஷனர் ஆய்வு

வடலூர் சத்திய ஞான சபை, பெருவெளியில் அறநிலையத்துறை கமிஷனர் ஆய்வு

வடலூர்: வடலூர் சத்திய ஞான சபை மற்றும், பெருவெளியில் அறநிலையத்துறை கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்


வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை மூலம் சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இங்குள்ள பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பாக கடந்த தி.மு.க., ஆட்சியில் ரூ.,100 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான அத்திவாரப் பள்ளங்கள் தோண்டப்பட்டதை அடுத்து எதிர்ப்பு எழுந்தது. பார்வதிபுரம் கிராம மக்கள் அத்திவார பள்ளங்களில் இறங்கி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கைதாகி, வழக்குகள் நிலுவையில் உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், சன்மார்க்கர்கள் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று திட்டம் முடக்கப்பட்டது. புதிய ஆட்சி அமைந்ததும் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் பெருவெளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று, அறநிலையத்துறை கமிஷனர் வினய், வடலூர் சத்திய ஞான சபை மற்றும், பெருவெளி பகுதிகளில் ஆய்வு செய்தார். அவரிடம் பெருவெளி காப்பது குறித்து சன்மார்க்கர்கள், வள்ளலார் பணியகம் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பெருவெளி பகுதியில் உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான கோரிக்கை மனு ஒன்று வள்ளலார் பணியகம் சார்பில் கமிஷனரிடம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !