சரநாராயண பெருமாள் கோவிலில் அன்னக்கூடை திருக்கல்யாண உற்சவம்
ADDED :1 days ago
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அன்னக்கூடை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 ம் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று காலை சுப்ரபாத சேவை, கோபூஜை மற்றும் தோமாலை சேவை நடந்தது.
பகல் 11:00 மணிக்கு அன்னக்கூடை உற்சவத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
உபயதாரர்கள் ஜி.ஆர்.கே. எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், கோமதிதுரைராஜ், கோகுல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.