எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறார் ராஜாஜி
* எல்லாம் நன்மைக்கே. எதைக் கண்டும் கலங்காதே.
* நிம்மதியைத் தேடி அலையாதே. அது உன் மனதில்தான் உள்ளது.
* மவுனமாக இரு. மனவலிமை தானாகவே ஏற்படும்.
* பிறருக்கு தீங்கு செய்பவர், தனக்கே கேடு செய்து கொள்கிறார்.
* தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படு.
* நீ வாழும் விதத்தைப் பொறுத்தே அவரது முடிவு அமையும்.
* பொருட்களின் மீதுள்ள பற்றை விட்டு விடு. மகிழ்ச்சி பெருகும்.
* தர்மம் செய். அதற்கான பலன் உன்னைத் தேடி வரும்.
* மனதில் உறுதி இருந்தால் நோய் வந்தால் கூட கலங்க மாட்டாய்.
* மாற்றம் என்பது உலக இயல்பு. இதை புரிந்து கொண்டால் துக்கம் ஏது?
* ஐம்பூதம் ஒன்று சேர்ந்தால் பிறப்பு நிகழும். பிரிந்தால் இறப்பு நேரிடும்.
* பிறரைப் பற்றி சிந்தனை செய்து நேரத்தை வீணாக்காதே.
* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக கருதுபவனே ஞானி.
* உன் தகுதியை உயர்த்திக் கொள். அப்போது மகிழ்ச்சி தானாக வரும்.
* பிறருடைய போற்றுதலையோ, துாற்றுதலையோ பொருட்படுத்தாதே.
ராஜாஜி