உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்

பொன்னேரி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்

பொன்னேரி: தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண உத்சவம் கோலாகலமாக நடந்தது.


பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில், பிரசித்திபெற்ற லட்சுமியம்மன் கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள லட்சுமி நாராயண பெருமாள், லட்சுமியம்மன் திருக்கல்யாண உத்சவம் நடந்தது. தடப்பெரும்பாக்கம் குளக்கரை விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர். கோவில் முகப்பு மண்டபத்தில் லட்சுமியம்மன் சமேத லட்சுமிநாரயண பெருமாள் திருமணக் கோலத்தில், மணமேடையில் வீற்றிருந்தனர். பட்டாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்கினர். மங்கள வாத்தியங்கள் இசைக்க, வாண வேடிக்கைகளுடன் சுவாமிகளுக்கு மாலை மாற்றுதல், மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷம் எழுப்பி பெருமாளையும், லட்சுமியம்மனையும் நெஞ்சுருக வணங்கி வழிபட்டனர். அதை தொடர்ந்து, மஹா தீபாரதனை, ஊஞ்சல் சேவை, திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றன. இரவு, லட்சுமியம்மன், லட்சுமி நாராயண பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !