உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவனாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் நடைபயணம்

தேவனாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் நடைபயணம்

நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமி கோவில் பக்தர்கள், திருவந்திபுரம் தேவனாத சுவாமியை காண நடை பயணமாக சென்றனர்.


நெல்லிக்குப்பம், பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் பக்தர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அந்த பகுதியில், இருந்து திருவந்திபுரத்துக்கு நடைபயணமாக சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று அதிகாலை வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து நடைபயணத்தை துவக்கினர். ரமேஷ் பட்டாச்சாரியார், சுந்தர், கவுன்சிலர் சத்தியா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதில் சிறுவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி நடைபயணமாக திருவந்திபுரத்தை அடைந்தனர். அங்கு தேவனாத சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !