உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணுக்குறிய அழகு பற்றி எடுத்துரைக்கிறார் அவ்வையார்

பெண்ணுக்குறிய அழகு பற்றி எடுத்துரைக்கிறார் அவ்வையார்

* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம்.
* விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும்.  
* மனம் உற்சாகமாக செயல்பட அதிகாலையில் எழுந்திரு.
* குடும்பத்தை காத்தல், தர்மநெறியுடன் வாழ்தல், உயிர்களை நேசித்தல் இவையே பெண்ணுக்கு அழகு.
* ஒருவர் பலமுறை கூறிய பிறகு ஒரு செயலை முடிப்பது பண்பு ஆகாது.
* பெரியோரிடம் வாதிடாதே. முடிந்த வரை அவர்கள் சொல்வதைக் கேள்.
* இனிமை தரும் நல்ல சொற்களை மட்டும் பேசு.
* கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்.   
* நல்ல நுால்களைப் படி. உன் அறிவு வளரும்.
* இளமையில் வறுமை, முதுமையில் செல்வம் கிடைப்பது துன்பம் தான்.
* பல முறை ஆராய்ந்து முடிவு செய்த பிறகு செயலில் ஈடுபடு.    
* எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்று.       
* பிறர் கூறுவதற்கு முன்பே உன் கடமையை செய்து விடு.
* எந்த ஒரு செயலையும் அதற்குரிய காலத்தில் செய்து முடி.    
* பசியை விடக் கொடிய நோய் வேறில்லை.
* அளவுக்கு அதிகமாக சாப்பிடாதே.
* ஒரு பொருள் கிடைக்கவில்லை எனில் அதை உடனே மறந்து விடு.
* ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல். இதுவே விதியை வெல்லும் வழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !