உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜரை சுற்றும் கருடன்!

நடராஜரை சுற்றும் கருடன்!

திருவள்ளூர் மாவட்டம்  திருவாலங்காடு, நடராஜரின் பஞ்ச சபைகளில் ரத்தின சபையாக விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள குளம் செங்கசிய உன்மத்த மோட்ச புஷ்கரணி எனப்படுகிறது. இதை தேவாரத்தில் சென்றாடு தீர்த்தம் என்று நாவுக்கரசர் குறிப்பிடுகிறார். கிராதன் என்னும் வேடன், முதுமை காரணமாக, இந்தக் குளக்கரையில் விழுந்து உயிர்போகும் நிலையில் இருந்தான். அந்த வழியே வந்த ஆந்தை தாகம் தீர்க்க குளத்து நீரை அருந்தியது. பிறகு கிராதனுக்கு நேராக வந்து நின்று இறகை அசைத்தது. இறகில் இருந்து தெறித்த நீர்த் துளிகள் அவன் மீது   பட்டது. இந்த புண்ணியத்தின் காரணமாக சிவ பெருமான் அவனுக்கு காட்சி தந்தார். பெருமானே!  மிருகங்களையும்,  பறவைகளையும் கொன்று வாழ்வதே என் தொழிலாகி விட்டது. அவை துடிதுடித்து  இறக்கும்போதெல்லாம், என் மனம் புண்படும். அதற்குப் பிராயச்சித்தமாக  கருடனாகப் பிறந்து இந்தக்  கோயிலில் வசிக்கிறேன்.  இத்தலத்தில் வீதியுலா வந்து  கோயிலுக்குள் செல்லும் போது, நான் உம்மை வலம் வந்து வணங்க வேண்டும், என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அருளினார். ஆருத்ராதரிசனம், பங்குனி உத்திர நாட்களில், நடராஜர் வீதியுலா வந்து கோயிலுக்குள் நுழையும் போது கருடன் மூன்றுமுறை வட்டமடித்து வழிபடுவதைக் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !