உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக புதிய பேட்டரி பஸ்

பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக புதிய பேட்டரி பஸ்

பழநி: பழநி கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக தனியார் நிறுவனம் சார்பில் ஒரு பேட்டரி பஸ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்திரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள், கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க பக்தர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார், பேட்டரி பஸ் 2024,மார்ச்.3.,முதல் இயக்கப்பட்டு வருகிறது. 


இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  11 பேர் அமரக்கூடிய 14 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் 1, 23 பேர் அமரக்கூடிய 22பேட்டரி பஸ்,என 37 மின் வாகனங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.,2) ( சுப்ரீம் மொபைல்ஸ் குழுமம்) தனியார் நிறுவனம் சார்பில் நிர்வாகிகள் (குழுமத் தலைவர் ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் தீபாபிரியா, செல்வராஜ், பாரதி ஆகியோர்) 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்ஸை கோயில் நிர்வாகத்துடன் ஒப்படைத்தனர். அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ், அறங்காவலர்கள்மற்றும் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். தற்போது கிரி வீதியில் கோயில் சார்பில் 38 மின் வாகனங்கள் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 11,23 இருக்கைகள் கொண்ட பேட்டரி வாகனங்களை அக்.,13 முதல் அக்.,31 வரை பொறியாளர்களால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு அதில் 8 புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டது. தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க பராமரிக்க பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்." என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !