உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் மகா ருத்ராபிஷேகம்

பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் மகா ருத்ராபிஷேகம்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், மகா ருத்ராபிஷேகம் நடைபெற்றது.


பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரம் மற்றும் சென்னை மணிமங்கலம் படப்பை புஜ்ஜியஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி நேற்று முன்தினம் மகா ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 8.00 மணிக்கு விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து, ஏகாதச ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் நடந்தது. காலை 11.00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதனை தொடர்ந்து,12.00 மணிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சாரியார்கள் சங்கர நாராயணன்,பாபு ஆகியோர்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !