கோயில்களில் நாகசதுர்த்தி விழா கோலாகலம்:பக்தர்கள் வழிபாடு
ADDED :22 minutes ago
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள கோயில்களில் நாகசதுர்த்தி விழா கோலாக்கலமாக நடந்தது.
பரமக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் அரச மரத்தடியில் நாகர் மேடு உள்ளது. இங்கு நேற்று காலை ஏராளமான பெண்கள் மஞ்சள் கயிறு சாற்றி வழிபாடு நடத்தினர். அப்போது அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்து நாக தேவதையை வழிபட்டனர். நாக தோஷம் உள்ளவர்கள் பலரும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். கார்த்திகை மாதம் தீபாவளி அமாவாசைக்கு பின் 5ம் நாளில் ஒவ்வொரு ஆண்டும் விழா கொண்டாடப்படுகிறது. அப்போது தோஷ நிவர்த்திக்காகவும், சுமங்கலி பெண்கள் தங்கள் குடும்பத்தினரின் நீண்ட ஆயுள் வேண்டியும், திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெறவும் பிரார்த்தனை செய்கின்றனர்.