உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெயர்ச்சியடைந்தார் ராகு பகவான்: திருநாகேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பெயர்ச்சியடைந்தார் ராகு பகவான்: திருநாகேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர்- ராகு பகவான் கும்ப ராசிகளில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.


தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக,  தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவானின் திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும். 


ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த நிகழ்வு ராகு பெயர்ச்சி எனப்படுகிறது. அதன்படி, இன்று (நவ. 13ம் தேதி) மாலை 5:14 மணிக்கு ராகுபகவான் கும்ப ராசியிலிருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி கடந்த நவ.10ம் தேதி  லட்சார்ச்சனை நடைபெற்றது. ராகு பெயர்ச்சியை, முன்னிட்டு நவ. 11ம் தேதி கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து இன்று (நவ. 13ம் தேதி) காலை 9:30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், பிற்பகல், 4:40 மணிக்கு கட ம் புறப்பாடும் நடந்தது. பின் ராகு பகவானுக்கு பால், மஞ்சள், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட மங்களப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும், தங்க கவசத்துடன் அலங்கரிக்கப்பட்ட ராகு பகவானுக்கு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான புத்தகங்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இரவு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !