உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை திருக்குடை வில்லிவாக்கம் வழியாக யாத்திரை

திருவண்ணாமலை திருக்குடை வில்லிவாக்கம் வழியாக யாத்திரை

வில்லிவாக்கம்: திருவண்ணாமலை திருக்குடை யாத்திரை, வில்லிவாக்கம் வழியாக இன்று சென்றது.


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், திருவண்ணாமலை திருக்குடை யாத்திரை, திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோவிலில் இருந்து, நேற்று  காலை புறப்பட்டது. இரவு 9:00 மணிக்கு பாடியில் இருந்து, வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் வழியாக அகத்தீஸ்வரர் கோவிலை அடைந்தது. அங்கு இரவு முழுதும் திருக்குடை வைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து, இன்று காலை 9:00 மணிக்கு அகத்தீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடை யாத்திரை புறப்பட்டது. ஐ.சி.எப்., முத்து மாரியம்மன் கோவில், காந்தி நகர் வழியாக அன்னை சத்யா நகர் குபேர லிங்கேஸ்வரர், அண்ணா நகர் சிந்தாமணி விநாயகர், வடபழனி முருகன் என, அடுத்தடுத்து பல கோவில்கள் வழியாக, யாத்திரை சென்றது. வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேங்காய் கடை ரா.கிட்டு, சுந்தர வடிவேல், பார்த்தசாரதி, சீனிவாசன், ராஜகுமார், சரவணன் உள்ளிட்டோர், ஹிந்து ஆன்மிக சேவா டிரஸ்ட் நிறுவனரும், இளைய மடாதிபதியுமான லிங்கேசனுக்கு மரியாதை செலுத்தி, திருக்குடையை வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !