காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நாகசதுர்த்தி வழிபாடு
ADDED :16 minutes ago
காஞ்சிபுரம்: நாகசதுர்த்தியையொட்டி இன்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள நாக சிலைகளுக்கு பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
நாகசதுர்த்தியான இன்று, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள நாக சிலைகளுக்கு, நேற்று பெண்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதில், திருமணமான பெண்கள், நாக சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும், மஞ்சள், குங்குமம் இட்டு, குடும்ப நலன், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழவும், குழந்தைகள் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்கவும், திருமணமாகாத பெண்கள், திருமணம் நடக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.