உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி பூஜை

மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி பூஜை

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, 108 லிட்டர் பாலபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.


புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, மொரட்டாண்டியில் 27 அடி உயர சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரக பெயர்ச்சிகளின்போது சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி ஒன்னரை ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகும் ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் இன்று பிரவேசித்தார். அதையொட்டி, கோவிலில் உள்ள ராகு, கேது பகவானுக்கு சிதம்பர கீதாராம் குருக்கள் தலைமையில் 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், அபிஷேக பொடிகள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நட்சத்திர ராசி பரிகார ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராகு, கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. விழாவில், கீதா சங்கர குருக்கள், ஆசிரியர் ரமேஷ், அசோக் குருக்கள், மகேஸ்வரி, வித்யா, கீதா மாலதி, கோவில் டிரஸ்டிகள் சொர்ண பிரியா, ஸ்ரீகண்டன், யாதுஷா, அசோக் உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். நவ.,15 மாலை 3:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து சூரசம்ஹாரம், அலங்கார தீபாராதனை நடக்கும். நவ.,16 காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !