சபரிமலை போறீங்களா.. வாசலில் ஒரு தேய்காய் உடையுங்க.. வீட்டை காவல் காக்க வருவார் கருப்பசாமி!
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல். சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புõரணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார், முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களையும், அவர்கள் குடும்பத்தாரை பார்த்து கொள்வது உனது பொறுப்பு என்று ஐயப்பன் கருப்பண்ணசாமிக்கு கட்டளையிடுள்ளார். சபரிமலைக்கு செல்லும் முன் வீட்டில் ஒரு படியில் அரிசி நிறப்பி அதில் ஒரு எழமிச்சை சொருகிய கத்தியை வைத்து கருப்பசாமி கருதி வழிபடுவர். சபரிமலைக்கு செல்வதற்கு முன்பு வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு கிளம்புவார்கள் அந்த சத்தம் கேட்டவுடன் கருப்பன் வீட்டில் காவலுக்கு வந்துவிடுவதாக ஐதீகம். சபரிமலையில் இருந்து வீடு திரும்பியதும் வீட்டில் இன்னொரு தேங்காய் உடைப்பார்கள். அந்த தேங்காய் சத்தத்தை கேட்டபின் தான் கருப்பசாமி! கிளம்புவதாக நம்பிக்கை. இதற்காக தான் சபரிமலை செல்லும் போதும், வீடு திரும்பியதும் வாசலில் சூர தேங்காய் உடைக்கிறோம். சுவாமியே சரணம் ஐயப்பா..!