ஐயனாரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
சேலம்: சேலம், சித்தனூரில் உள்ள ஐயனாரப்பன் கோவில், ஐந்து நிலை ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. சேலம், மல்லமூப்பம்பட்டி அருகில் உள்ள சித்தனூர் காட்டுவளவில், ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை, 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. காலை, 6 மணிக்கு கோபுர கலச அபிஷேகமும், காலை, 6.30 மணிக்கு கோபுர அபிஷேகம் நடைபெறுகிறது. காலை, 7.15க்கு மேல் சேலம், ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு, சித்தனூர் பெரிய பழனியாண்டவர் கோவிலை சுற்றி, ஐயனாரப்பன் கோவிலை வந்தடைகிறது. மாலை, 4 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், இரவு, 8 மணிக்கு காமாட்சியம்மன், கருப்பண்ண ஸ்வாமி, ஐயனாரப்பன், வள்ளிதெய்வானை முருகன் ஸ்வாமிக்கும் கண்திறப்பு நடைபெறுகிறது. இரவு, 8.30 மணிக்கு மேல் பிரம்ம எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது. நாளை காலை, 4 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், காலை, 8 மணிக்கு குடம் புறப்படுதல், காலை, 8.15 மணிக்கு ராஜகோபுர கும்பாபிஷேகமும், பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.காலை, 8.30 மணிக்கு சர்வ தேவாலய கும்பாபிஷேகம், தீப ஆராதனை நடத்தப்படுகிறது.