அருணாசலேஸ்வரர் கோவிலினுள் அமைந்துள்ள தீர்த்தங்கள்
பிரம்ம தீர்த்த குளம்
பிரம்ம தீர்த்த குளம், 22,800 சதுர அடி பரப்பளவில், 40 அடி ஆழம் கொண்டவை. கோவிலின் உட்புறம், நான்காம் பிரகாரத்தில், புரவி மண்டபத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. திருக்குளம் இருபுறமும் மூடப்பட்டு பாதுகாப்பாக அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருவிழா 10-ம் நாள் சுப்பிரமணியசுவாமி தீர்த்தவாரி நடைபெறும். எப்போதாவது சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ ஏற்படும் போது அஸ்தரதேவர் தீர்த்த வாரி நடைபெறும்.
சிவகங்கை தீர்த்தம்
சிவகங்கை தீர்த்த குளம், 24,090 அடி பரப்பளவில், 40 அடி ஆழம் கொண்வை, 5ம் பிரகாரத்தில், பெரிய நந்தி அருகே அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் ஆடிப்பூரம் அன்று நடைபெறும், 10ம் நாள் திருவிழா அன்று வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முன்பு தீர்த்தவாரி நடைபெறும்.