உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீப ஒளியில் ஜொலித்த ஆதியோகி: கோவை ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாடு

தீப ஒளியில் ஜொலித்த ஆதியோகி: கோவை ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாடு

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டதால், ஈஷா வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஜொலித்தது.


கோவை ஈஷா யோகா மையத்தில், கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள தியானலிங்கம், நந்தி, லிங்க பைரவி வளாகம் மற்றும் சூரிய குண்டம் மண்டபத்தில், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அகல்விளக்குகளை ஏற்றினர். அதேபோல, ஆதியோகி வளாகத்தில், ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. இதனால், ஈஷா யோகா மைய வளாகம் மற்றும் ஆதியோகி திருவுருவம் தீப ஒளியில் ஜொலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !