உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தர் தியான பீடம் அமைக்கும் பணி ஆய்வு!

புத்தர் தியான பீடம் அமைக்கும் பணி ஆய்வு!

ஆத்தூர்:  ஆத்தூர் அடுத்த, தலைவாசல் தியாகனூர் கிராமத்தில், இரு வேறு இடங்களில், தலா பத்து அடி உயரம் கொண்ட புத்தர் சிலைகள் உள்ளது. அதில், ஒரு புத்தர் சிலை கேட்பாரற்று கிடந்தது. விவசாய நிலத்தில் கேட்பாரற்று கிடந்த புத்தர் சிலைக்கு, மெட்ராஸ் சிமென்ட், சிட்டி யூனியன் பாங்க், எஸ்.கே., கார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ., ஸ்டீல் கம்பெனி ஆகிய தனியார் நிறுவனங்கள், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தியான பீடம்  அமைக்க முன் வந்தன. கடந்த ஆண்டு அக்டோபர், 10ம் தேதி, தியான பீடம் அமைக்க அடிக்கல் நாட்டினர். நேற்று, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமையில், ஆத்தூர் ஆர்.டி.ஓ., முத்துராமலிங்கம், தாசில்தார் தங்கராஜ் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள், தியான பீடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில், புத்த மத வழிபாடு இருந்துள்ளது. 11ம் நூற்றாண்டுக்கு பின், பவுத்த மத வழிபாடுகள் இல்லை. தியாகனூர் கிராமத்தில், ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் வடிமைத்துள்ள, இரண்டு புத்தர் சிலைகள் உள்ளது.  ராஜ்கட், சாஞ்சி போன்ற இடங்களில் உள்ள புத்த தியான பீடம் வடிவமைப்பில், தியாகனூர் கிராமத்தில், தனியார் நிறுவனங்கள் சார்பில், தியான பீடம் கட்டுமானப்பணிகள், விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !