உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா கும்பமேளாவில் மீராகுமார் பங்கேற்பு

மகா கும்பமேளாவில் மீராகுமார் பங்கேற்பு

அலகாபாத்: அலகாபாத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் பங்கேற்று, புனித நீராடினார். உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும், மகா கும்பமேளாவில் பங்கேற்க, நாடு முழுவதிலிருந்து மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதில், பங்கேற்க நேற்று அலகாபாத் வந்த, லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நேரடியாக திரிவேணி சங்கமத்திற்கு சென்று, புனித நீராடினார். பின், நிருபர்களிடம் பேசிய மீராகுமார் கூறுகையில், ""நம் நாட்டின் ஜனநாயகம் சிறக்கவும், ஆழமாக வேர் ஊன்றவும், பிரார்த்தனை செய்தேன்; வரலாற்று சிறப்புமிக்க, கங்கை நதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !