உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புனரமைப்பு பணி துவக்கம்

விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புனரமைப்பு பணி துவக்கம்

விழுப்புரம்: சித்திரை திருவிழாவையொட்டி விழுப்புரத்தில் உள்ள 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு புனரமைப்பு பணிகள் துவங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு பாலபிஷேகம் நடக்கிறது. இந்தாண்டும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம் தெற்கு அய்யனார் குளக்கரையில் உள்ள 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு புனரமைப்பு பணிகள் நேற்று துவங்கியது. முன்னாள் கவுன்சிலர் தனுசு மேற்பார்வையில் சிதம்பரம், திருவதிகை பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் சிலைக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !