மாசிமக உற்சவத்தில் பங்கேற்க உலகளந்த பெருமாள் புறப்பாடு
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் உற்சவர் மாசிமகத்தில் கலந்துகொள்ள இன்று புறப்படுகிறார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் உற்சவர் தேகளீச பெருமாள், கடலூர் தேவனாம் பட்டினம் கடற்கரையில் நடைபெறும் மாசிமக விழா வில் கலந்து கொள்கிறார். இன்று ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகிறார். அதிகாலை 6 மணிக்கு புறப்பாடாகி ஆவி-புதூர் வழியாக குன்னத்தூரை கடந்து இரவு பெண்ணைவலத்தில் தங்குகிறார். நாளை மடப்பட்டு வழியாக சென்று வீரப்பாரில் தங்குகிறார். தொடர்ந்து திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில், காராமணிக்குப்பம், திருப்பாப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் தங்கி மண்டகபடி நடக்கிறது.வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி, திருமஞ்சன நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இரவு திருப்பாபுலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் நடைபெறும் விசேஷ திருமஞ்சனத்தில் பங்கேற்கிறார். திருவந்திபுரம், பாலூர், திருவெண்ணெய்நல்லூர், சி.மெய்யூர் வழியாக 42 ஊர்களில் நடைபெறும் மண்டகபடி, ஆராதனையில் கலந்து கொண்டுவிட்டு, அடுத்தமாதம் 5ம் தேதி ஆஸ்தானம் எழுந்தருள்கிறார்.